Wednesday, July 1, 2026

குட்டி நீர்யானைக்கு பெயரிட மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!

 

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் 90ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அங்கு புதிதாகப் பிறந்துள்ள நீர்யானைக் குட்டிக்கு பெயரிடுவதற்கான விசேட வாய்ப்பு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி 18 வயதிற்குட்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களும் இந்த நீர்யானைக் குட்டிக்கான பெயர்களைப் பரிந்துரைத்து சமர்ப்பிக்க முடியும்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் 90ஆவது ஆண்டு நிறைவு வரும் ஜூலை 3 அன்று கொண்டாடப்படவுள்ளது.

இதனை முன்னிட்டே இந்தத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டங்களின் போது, பொதுமக்கள் இந்த நீர்யானைக் குட்டியை முதல்முறையாகப் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

1936ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தெஹிவளை மிருகக்காட்சிசாலையானது, கடந்த 9 தசாப்தங்களாக இலங்கையில் வனவிலங்கு பாதுகாப்பு, விலங்கு நலம், ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி ஆகியவற்றில் முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்த விசேட கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுமாறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.

0 comments:

Post a Comment