Saturday, July 18, 2026

"பிரதமராக இருந்தாலும் கூட, நான் வீட்டில் நான்கு பூனைகளின் பணியாளர்" - பிரதமர் ஹரிணி அமரசூரிய

 

வீதிகளில் வாழும் விலங்குகள் மீது அன்பையும் கருணையையும் காட்ட வேண்டுமென பிரதமர் ஹரிணி அமரசூரிய பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுயாதீன விலங்கு நல மருத்துவர்கள் சங்கத்தினால் நேற்று (17) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், "வீட்டில் பூனைகளை வளர்ப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும், நாம் அவர்களின் உரிமையாளர்கள் அல்ல, நாம் அவர்களின் பணியாளர்கள்.

எந்தவொரு உயரிய பதவியில் இருந்தாலும், வீட்டுக்குச் சென்றதும் நான் நான்கு பூனைகளின் பணியாளராகவே இருக்கிறேன்.

நமது வீடுகளில் இருக்கும் செல்லப் பிராணிகளைப் பற்றி மட்டுமன்றி, வீதிகளில் திரியும் விலங்குகள் குறித்தும் நாம் விசேட கவனம் செலுத்த வேண்டும். அது நம் அனைவரின் பொறுப்பாகும்" என்று குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment