Thursday, July 9, 2026

இலகு தொடருந்து திட்டத்தை முன்னெடுப்பதில் சிக்கல் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவிப்பு

 

இலகு தொடருந்து போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தற்போதைய சூழலில் சாத்தியமற்றது எனத் தான் கருதுவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (9) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த திட்டம் குறித்து விரிவான ஆய்வொன்றை அரசாங்கம் மேற்கொண்டதாகவும், அந்த ஆய்வின் முடிவுகளின்படி இந்த திட்டம் பொருளாதார ரீதியாகச் சாத்தியமற்றது என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

"இந்தத் திட்டத்தின் நிர்மாணச் செலவு மற்றும் இதைப் பயன்படுத்தும் பயணிகளின் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, இது நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். இந்த உண்மைகளின் அடிப்படையிலேயே இந்தத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டாம் என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

இலகு தொடருந்து திட்டத்திற்குப் பதிலாக, பொருளாதார ரீதியாக அதிக பலன் தரக்கூடிய மாற்றுப் போக்குவரத்துத் திட்டங்களை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, 'மெட்ரோ பேருந்து' போன்ற திட்டங்கள் அதிக சிக்கனமானவை என்பதால், அத்தகைய மாற்றுத் திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment