Thashvini Rajendran ✒️
முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று(18) இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
நந்திக்கடல் கரையோரப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, தமது அன்புக்குரியோருக்கான அஞ்சலிகளையும் மரியாதையினையும் செலுத்தினர். நினைவுச் சுடர்கள் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தியதுடன், அமைதியான முறையில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது.
குறிப்பாக, ஆண்டுதோறும் நடைபெறும் இந்நினைவேந்தல் நிகழ்வில் இவ்வருடம் அதிகளவான மக்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. உள்நாட்டைச் சேர்ந்தவர்களுடன் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் தாயகத்துக்கு வருகைதந்து இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதனால், இவ்வாண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மேலும் சிறப்புடனும் பெருமளவான மக்கள் பங்கேற்புடனும் நடைபெற்றது சிறப்பம்சமாகும் .







0 comments:
Post a Comment