சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது கூட்டு மீளாய்வுகளை நிறைவு செய்துள்ளதுடன், சுமார் 695 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக விடுவிப்பதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புதிய தவணையுடன், இந்த திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் நேற்று வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு போர் மற்றும் 'டிட்வா' சூறாவளியின் பின்னடைவுகள் உள்ளிட்ட உலகளாவிய மற்றும் உள்நாட்டு சவால்களுக்கு மத்தியிலும், சீர்திருத்த திட்டத்தின் கீழ் இலங்கையின் செயல்திறன் "பொதுவாக வலுவாக" இருந்தது என்று சர்வதேச நாணய நிதியம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கை 2025 டிசம்பர் இறுதி வரையிலான அனைத்து அளவிடக்கூடிய செயல்திறன் அளவுகோல்களையும் பூர்த்தி செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம், பெரும்பாலான கட்டமைப்பு மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளன அல்லது தாமதங்களுடன் அமுல்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளது.
எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான செலவு-மீட்பு விலையிடலை மீண்டும் நிலைநிறுத்துவது தொடர்பான முன்தேவை நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், புதிய வெளிநாட்டுக் கொடுப்பனவு நிலுவைகளைத் தவிர்த்தல் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிப்பதையோ அல்லது தீவிரப்படுத்துவதையோ தவிர்த்தல் ஆகிய இரண்டு தொடர்ச்சியான செயல்திறன் அளவுகோல்களை இலங்கை பின்பற்றத் தவறியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய கிழக்கு மோதல்களுடன் தொடர்புடைய உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் அதிகரித்து வரும் எண்ணெய் விலைகள் காரணமாக, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2025 இல் பதிவான 5வீதத்தில் இருந்து 2026 இல் 3வீதமாகக் குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
அதேநேரம், 2026 இல் பணவீக்கம் 5வீதமாக உயரும் என்றும், நடப்புக் கணக்கு இருப்பு மீண்டும் பற்றாக்குறையாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
'டிட்வா' சூறாவளியைத் தொடர்ந்தான மீட்புச் செலவினங்கள் உள்அத்துடன், அதிகப்படியான மாற்று விகித நெகிழ்வுத்தன்மை வெளிநாட்டு கையிருப்புகளை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தையும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
ளிட்ட பொருளாதார அதிர்ச்சிகளுக்குப் பதிலளிக்கும் வகையில் 2026 இல் நிதித் தளர்த்தல்களை மேற்கொள்வது பொருத்தமானது எனக் குறிப்பிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம், எனினும் 2027 ஆம் ஆண்டு முதல் இலங்கை தனது நிதி இலக்குகளுக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
நீண்டகால ஸ்திரத்தன்மைக்கு நிலையான வருவாய் திரட்டல், பொது நிதி மேலாண்மை சீர்திருத்தங்கள், மின்சாரத் துறை சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்ந்து முக்கியமானவையாக விளங்குகின்றன என்று பிரதி முகாமைத்துவ பணிப்பாளர்; கென்ஜி ஒகமுரா தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment