பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பிரதமரின் ஊடகப் பிரிவு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், பல்வேறு முன்னணி ஊடக நிறுவனங்கள் மற்றும் செய்தி இணையத்தளங்களின் உத்தியோகபூர்வ இலச்சினைகளை (Logos) சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி இந்த போலி உள்ளடக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் புகைப்படங்களை எடிட் செய்தும், அவர் சில கருத்துக்களைக் கூறுவது போன்று போலியாகத் தொகுக்கப்பட்ட காணொளிகளும் இணையத்தில் பரப்பப்பட்டு வருகின்றன.
நாட்டின் பொருளாதாரம், வரி கொள்கைகள் மற்றும் வணிகம் அல்லது வேலைவாய்ப்பு வாய்ப்புகள் போன்ற விடயங்கள் தொடர்பாகவே இவ்வாறான தவறான மற்றும் திசைதிருப்பும் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்த போலிச் செய்திகள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி, திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளன.
எனவே, பொதுமக்கள் இவ்வாறான போலியான பதிவுகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அரசாங்கத்திற்கும் பிரதமரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இவ்வாறான போலித் தகவல்களை உருவாக்குபவர்கள் மற்றும் அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமரின் ஊடகப் பிரிவு எச்சரித்துள்ளது.
0 comments:
Post a Comment