ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தொன்றைக் கம்பளை காவல்துறை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது, குறித்த பேருந்தின் சாரதி மதுபோதையில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கம்பளை போக்குவரத்துப் பிரிவின் காவல்துறை அதிகாரிகளினால் அந்தச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், குறித்த தனியார் பேருந்தும் கம்பளை காவல்துறை நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment