அரசாங்கம் செய்து தர வேண்டும். இன்று நாட்டில் மூன்று வேளை உணவு உண்ண முடியாத வறுமை நிலை காணப்படுகிறது. எனவே, இந்த நிலங்களை மீண்டும் அபிவிருத்தி செய்து, நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய திம்புலாகல ஆரண்ய சேனாதிபதிய திம்புலாகல ராகுலலங்கார தேரர் குறிப்பிடுகையில்,
தொப்பிகல திவலபத்தான பகுதியில் காலங்காலமாக விவசாயம் செய்த விவசாயிகள், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தலையீட்டினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதற்கு எதிராக பெங்கமுவே நாலக தேரர் மற்றும் செனவிரத்ன உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தை நாடினர். அதன் பலனாக தற்போது விவசாயிகளுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது.
இன்று பெங்கமுவே நாலக தேரர், அநுராதா யஹம்பத் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து, எதிர்வரும் பெரும் போகத்தில் மீண்டும் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்துக் கலந்துரையாடினோம்.
மகாவலி அதிகார சபையின் வதிவிட முகாமையாளருடன் இது தொடர்பாகப் பேசி, விவசாயிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கவும், விளைச்சலை விற்பனை செய்வதற்குத் தேவையான சந்தை வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வரலாற்று வெற்றியானது இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் என்றார்.

0 comments:
Post a Comment