Saturday, May 9, 2026

அனைத்து அன்னைகளுக்கும் இனிய அன்னைர் தின நல்வாழ்த்துக்கள்!

 





அம்மா என்றொரு வார்த்தையில்

அன்பின் உலகம் மறைந்துள்ளது…

அவள் சிரிப்பில் அமைதி உண்டு,

அவள் அரவணைப்பில் உயிர் உண்டு…


நாம் விழும் நேரம் தாங்கும் தோள்,

நாம் வெல்வோம் என்று நம்பும் உள்ளம்…

தன் கனவுகளை மறந்து வைத்து

பிள்ளை கனவுக்கு உயிர் தரும் தெய்வம்…


இருள் வந்தாலும் விளக்காய் நிற்பாள்,

இடர் வந்தாலும் துணையாக இருப்பாள்…

இந்த உலகில் ஈடு இணையற்ற

முதல் காதலும் — என் அம்மாதான்… 


அன்னைர் தின நல்வாழ்த்துக்கள்!

எல்லா அம்மாக்களுக்கும் அன்பும் நன்றியும் நிறைந்த நாள் உலகளாவிய ரீதியில் அன்னைர் தினம் அன்பு, மரியாதை மற்றும் நன்றியை வெளிப்படுத்தும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. 


பல நாடுகளில் பல்வேறு தினங்களில் கொண்டாடப்பட்டாலும், அதன் உணர்வு ஒன்றே — “அம்மாவின் அன்பை போற்றுவது.



உலகின் பல நாடுகளில் இன்று அன்னைர் தினம் கொண்டாடப்படுகிறது.

உயிரை அளித்து, அன்பால் வாழ்வை அழகாக்கும் அனைத்து அம்மாக்களுக்கும் மரியாதை செலுத்தும் நாள் இது.


தன் பிள்ளையின் சிரிப்பில் சந்தோஷம் காணும் அன்னையின் அன்பிற்கு ஈடு இணையில்லை.

அம்மாவின் அர்ப்பணிப்பு, தியாகம், பொறுமை மற்றும் பாசத்தை நினைவுகூர்ந்து நன்றியை சொல்லும் இனிய தருணமே அன்னைர் தினம். 


“அம்மா என்பது ஒரு வார்த்தை அல்ல…

அது வாழ்நாள் முழுவதும் உணரப்படும் அன்பு.” 


அனைத்து அன்னைகளுக்கும் இனிய

 அன்னைர் தின நல்வாழ்த்துக்கள்!

0 comments:

Post a Comment