நடப்பு ஆண்டின் மே மாதம் நிறைவடைவதற்கு முன்னதாகவே, இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தைக் கடந்துள்ளதாக வெளிவிவகார, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், இலங்கை சுற்றுலாத்துறை வரலாற்றில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் இந்த மைல்கல் சாதனை எட்டப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்ற நிலைமைகளால் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் ஸ்திரமற்ற தன்மை காரணமாக கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சற்றே மந்தநிலை காணப்பட்டது.
எனினும், கடந்த 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட சாதனை அளவிலான சுற்றுலா வளர்ச்சியைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் ஐந்து மாதங்களுக்குள் 10 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
2026 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளின் வரிசையில் இந்தியா தொடர்ந்தும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவிலிருந்து மாத்திரம் 2 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதனைத் தவிர்த்து ஐக்கிய இராச்சியம் (UK), ரஷ்யா, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இலங்கையின் முதன்மை சுற்றுலாச் சந்தைகளாக விளங்குகின்றன.
0 comments:
Post a Comment