மீரிகம மற்றும் அம்பேபுஸ்ஸ ஆகிய தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான பிரதான தொடருந்துபாதையில், சிக்னல் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறிய அகழ்வு இயந்திரம் ஒன்றுடன் தொடருந்து மோதி விபத்துக்குள்ளானது.
முதற்கட்ட தகவல்களின்படி, தொடருந்துபாதையில் பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த சம்பவம் காரணமாக, குறித்த பிரதான தொடருந்து பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், தொடருந்து பாதைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, விபத்தை அடுத்து தொடருந்து பாதையைச் சீரமைக்கும் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்வதால், அதற்கு அருகிலுள்ள பிரதான வீதியின் ஒரு வழித்தடத்திலான போக்குவரத்து தற்காலிகமாகத் தடைப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துத் தொடர்பாக இலங்கை தொடருந்து திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

0 comments:
Post a Comment