Wednesday, May 27, 2026

எகிறியது மரக்கறி விலை

 

உள்நாட்டு சந்தையில் மரக்கறிகளின் விலை சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.

இதன்படி, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில், ஒரு கிலோகிராம் கறிமிளகாய் 580 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், வவுனியாவில் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில், ஒரு கிலோகிராம் உருளைக் கிழங்கு 300 ரூபாய்க்கும் நுவரெலியாவில் 270 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் ஒரு கிலோகிராம் கரட், 420 ரூபாய்க்கும் நுவரெலியாவில் 330 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் ஒரு கிலோகிராம் லீக்ஸ் 310 ரூபாய்க்கும் வவுனியாவில் 380 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் ஒரு கிலோகிராம் கோவா 300 ரூபாய்க்கும் நுவரெலியாவில் 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment