Thursday, May 28, 2026

வீழ்ச்சியை பதிவு செய்து வரும் தங்க விலை

 

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (28) வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சியை பதிவு செய்திருந்த நிலையில் தற்போது இலங்கையிலும் தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 386,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், தற்பொழுது 3,000 ரூபாயால் குறைவடைந்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 383,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 352,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,875 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,050 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

0 comments:

Post a Comment