யாழ்ப்பாணம்-செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமத்துக்கான இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரைப் பயணம் நேற்று ஆரம்பமானது.
இதில் பங்கேற்போர், காடு, மலை மற்றும் ஆறு உட்பட்ட 800 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான தூரத்தை 54 நாட்களில் கடந்து முருகப்பெருமானின் திருநாமங்களை போற்றிப் பாடி நடந்தே செல்வார்கள்.
நீண்ட வரலாற்றை கொண்ட இந்த புனிதமான பாத யாத்திரையில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து முருக அடியவர்கள் கலந்து கொள்கிறார்கள்
தமிழர்கள் சிங்களவர்கள் என இன மத வேறுபாடின்றி அனைவரும் இந்த யாத்திரையில் கலந்து முருகப்பெருமானின் புகழ் பாடி செல்கிறார்கள்.
0 comments:
Post a Comment