நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 6 மாவட்டங்களில் 6 ஆயிரத்து 907 குடும்பங்களைச் சேர்ந்த 27 ஆயிரத்து 419 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதன் காரணமாகஇ நேற்று முதல் இன்று மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள இற்றைப்படுத்தப்பட்;ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்இ கம்பஹா - திவுலப்பிட்டிய பிரதேசத்தில் 64 வயதுடைய ஒருவர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக தற்போது 17 தற்காலிக நலன்புரி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன்இ அவற்றில் 351 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 192 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்இ நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் 2 வீடுகள் முழுமையாகவும்இ 807 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையேஇ நாட்டில் நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாகஇ களு கங்கையின் தாழ்நிலப்பகுதியில் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
களு கங்கையின் கிளையாறான குடா கங்கைஇ மில்லகந்த பகுதி சிறிய அளவிலான வெள்ள நிலையை எட்டியுள்ளதுடன்இ நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புபுதுபாவில மற்றும் எல்லகாவ பகுதிகள் களு கங்கையின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தைத் தாண்டிஇ தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
இதனிடையேஇ இரத்தினபுரி மாவட்டத்தில் களு கங்கையின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தில் காணப்பட்ட போதிலும்இ தற்போது அங்கு நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - நாகலகம் வீதி பகுதியில் களனி கங்கையின் நீர்மட்டம் இன்னமும் எச்சரிக்கை மட்டத்திலேயே (யுடநசவ டுநஎநட) நீடிக்கிறது.
எனினும்இ அங்கு நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதுடன்இ களனி கங்கையின் ஏனைய பகுதிகளான ஹன்வெல்லஇ கிளன்கோர்ஸ்இ கிதுல்கல ஆகிய இடங்களில் நீர்மட்டம் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளது.
துனமலை பகுதியில் அத்தனகலு ஓயா இன்னமும் சிறிய அளவிலான வெள்ள மட்டத்திலேயே காணப்படுவதாகவும்இ ஆனால் அங்கு நீர்மட்டம் தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவிக்கிறது.
0 comments:
Post a Comment