Friday, May 29, 2026

தங்கம் மற்றும் வாகனக் கடன்களுக்கு மத்திய வங்கி விதித்த கட்டுப்பாடு

 

வாகன நிதியுதவிகள் மற்றும் தங்கக் கடன்கள் மீதான கட்டுப்பாடுகளைஇ இலங்கை மத்திய வங்கி இறுக்கியுள்ளமையானது, இந்த நாட்டின் கடன் வழங்கும் நிறுவனங்களின்இ குறிப்பாக நிதி நிறுவனங்களின் அபாயகரமான சுயவிபரங்களை மேம்படுத்த உதவும் என்று ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின்; இந்த இறுக்கமான கட்டுப்பாடுகள்இ இந்த தயாரிப்புகளில் அதிக ஈடுபாட்டைக் கொண்டுள்ள நிறுவனங்களின் கடன் வழங்கும் அளவு மற்றும் வருவாய் வளர்ச்சியில் தற்காலிகமாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஃபிட்ச் சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய வங்கியின் புதிய வழிகாட்டுதலின்படிஇ ஒரு வருடத்திற்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான குத்தகைக் கடன் வரம்பு 70வீதத்தில் இருந்து 60வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்படாத மற்றும் ஒரு வருடத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான கடன் வரம்பு 60வீதத்தில் இருந்து 40% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதலுக்கு முன்னர் திறக்கப்பட்டு, இன்னும் நிதியுதவி பெறப்படாத கடன் கடிதங்களுக்கு இடைக்கால சலுகைகளை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

தங்கக் கடன்களை பொறுத்தவரை, புதிய கடன்கள் மற்றும் புதுப்பிக்கப்படும் கடன்கள் ஆகிய இரண்டிற்கும் வரம்பு 80மூ இல் இருந்து 70% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வரம்புக் குறைப்பு செயற்பாடு, பிணை மதிப்புகள் வீழ்ச்சியடைவதற்கு எதிரான பாதுகாப்பை பலப்படுத்துவதுடன்இ கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் இழப்புகளின் தீவிரத்தையும் குறைக்கும் என ஃபிட்ச் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், அதிக பிணை மதிப்புஇ சாதகமான மூலதனக் கொள்கை மற்றும் குறைவான நிதி ஒதுக்கீடு ஆகியவற்றின் ஆதரவுடன் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வேகமாக வளர்ச்சியடைந்த தங்கக் கடன்களின் அபாயக் குவிப்பைக் கட்டுப்படுத்த இந்த புதிய எல்லை உதவும் என நம்புவதாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் குறிப்பிட்டுள்ளது.

ஃபிட்ச் தரப்படுத்தப்பட்ட வங்கிகளில் மக்கள் வங்கி மிக அதிகளவாக 20மூ தங்கக் கடன்களைக் கொண்டுள்ளது. ஏனைய வங்கிகள் 10% அல்லது அதற்கும் குறைவாகவே கொண்டுள்ளன.

மறுபுறம்இ 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் வாகன இறக்குமதிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வாகன நிதியுதவிகள் வேகமாக அதிகரித்தன.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இரண்டும் 2025 இல் 50மூ க்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. நிதி நிறுவனங்களின் ஒட்டுமொத்தக் கடன்களில் வாகன நிதியுதவி 65மூ ஐக் கொண்டுள்ள நிலையில்இ வங்கிகளில் இது 5மூ க்கும் குறைவாகவே காணப்படுகிறது.

இந்தநிலையில்,மத்திய வங்கியின் இந்த புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நிதி நிறுவனங்களுக்கே அதிக பலனைத் தரும் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் குறிப்பிட்டுள்ளது.

0 comments:

Post a Comment