மட்டக்களப்பு மட்/கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய ஆவ் ஆண்டுக்கான
பாடசாலை வளாகத்தில் ஒழுக்கம் மற்றும் மாணவர் தலைமையை மேம்படுத்தும் நோக்கில் புதிய ஒழுக்கப் பொறுப்பாளர்கள் தெரிவு செய்யும் நிகழ்வு இன்று (20) புதன்கிழமை காலை 9.00 மணி அளவில்
பாடசாலையின் அதிபர் திருமதி அருள்தாஸ் தலைமையில் இடம்பெற்ற இவ்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக (திட்டமிடல்) பிரதிக்கல்வி பணிப்பாளர் கமலமோகனதாசன் மற்றும்
ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பனிப்பாளரும் பாடசாலையின் மேம்பாட்டுத் திட்ட இணைப்பாளர் திரு. பிரகாஷ் ஆகியோர்
முன்னிலையில்
தெரிவான மாணவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டதுடன், பாடசாலை ஒழுங்கையும் மாணவர்களிடையே ஒற்றுமையையும் பேணும் வகையில் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மேலும் பாடசாலை வளாகத்திற்குள் சிறுவர்களின் பொழுதுபோக்கு மற்றும் மகிழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவும் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், பாடசாலை சூழலை மேலும் சிறப்பூட்டும் முயற்சியாக அமைந்தது.





0 comments:
Post a Comment