மாத்தளை மாவட்டத்தின் தும்பர மலைத்தொடருக்குச் சொந்தமான புவக்பிட்டிய பள்ளத்தாக்கு பகுதியில், இலங்கைக்கு மாத்திரமே உரித்தான புதிய பாலூட்டி (எலி) இனமொன்றை இலங்கைப் ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் கண்டறிந்து அறிவியல் உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளனர்.
பேராசிரியர் சுயாமா எச். போயகொட, பேராசிரியர் மாதவ மீகஸ்கும்புர மற்றும் கலாநிதி களுகம் மனமேந்திர-ஆரச்சி ஆகியோர் மேற்கொண்ட நீண்டகால ஆராய்ச்சியின் பின்னரே இந்த புதிய கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய இனம் தொடர்பான அறிவியல் ஆராய்ச்சி அறிக்கை, உலகப் புகழ்பெற்ற "ZooKeys" அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த புதிய உயிரினத்துக்கு அறிவியல் ரீதியான பெயரிடப்பட்டுள்ளது.
அறிவியல் பெயர் (Scientific Name): Mus dumbara
ஆங்கிலப் பெயர் (English Name): Dumbara valley spiny mouse
சிங்களப் பெயர் (Sinhala Name): දුම්බර කටු හීන් මීයා (தும்பர கட்டு ஹீன்ப மியா)
தமிழில் பொதுப் பெயர்: தும்பர பள்ளத்தாக்கு முள் எலி
பொதுவாக இந்த இனத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான எலிகள் உலர் வலய சுற்றுச்சூழல் அமைப்புகளிலிருந்தே பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், இந்த புதிய இனம் ஈரவலய மலைக்காடொன்றில் கண்டறியப்பட்டமை ஒரு சிறப்பம்சமாகும் என ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உலக பாரம்பரிய தும்பர வன எல்லையிலிருந்து மற்றுமொரு இலங்கைக்கு உரித்தான புதிய இனம் கண்டறியப்பட்டுள்ளமையானது, அந்த சுற்றுச்சூழல் அமைப்பின் தனித்துவமான பல்லுயிர்த்தன்மையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
0 comments:
Post a Comment