நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
அடுத்த சில நாட்களுக்குள் இரண்டு மசகு எண்ணெய் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து தலா 90,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை அந்த கப்பல்கள் ஏற்றி வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை உயர்வு குறித்து பரவி வரும் பொய் வதந்திகள் காரணமாகவே சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் அவதானிக்கப்பட்டதாக நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமார மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment