Tuesday, May 26, 2026

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வெற்றிடங்களை உடனே நிரப்ப அமைச்சர் உத்தரவு

 

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் விசாரணை நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்குத் தேவையான பணியாளர்களை உடனடியாகப் பணியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், அமைச்சின் செயலாளர் மற்றும் மேலதிக செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.


சிறுவர் பாதுகாப்புத் துறையில் தற்போது நிலவும் பிரச்சினைகள் மற்றும் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து, அமைச்சருக்கும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்தக் கூட்டத்தின் போது, விசாரணைகள் மற்றும் அது சார்ந்த சேவைகளின் திறனை மேம்படுத்துவதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் தற்போது நிலவும் வெற்றிடங்களை நிரப்ப வேண்டியதன் அவசியம் உட்பட, சிறுவர் பாதுகாப்புடன் தொடர்புடைய அண்மைக்கால முன்னேற்றங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.


அத்துடன், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தின் விதிகளை நடைமுறைப்படுத்துவதில் அந்த அதிகாரசபையின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாப்பது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

0 comments:

Post a Comment