Tuesday, May 26, 2026

இணையக் கட்டுப்பாடுகளை நீக்க ஈரான் ஜனாதிபதி உத்தரவு

 

ஈரானில் விதிக்கப்பட்டிருந்த இணையக் (Internet) கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்கி, இணைய வசதியை மீண்டும் சீரமைக்குமாறு அந்தநாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) உத்தரவிட்டுள்ளதாக ஈரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம் (Mehr News Agency) தெரிவித்துள்ளது.


தொடர்பாடல் அமைச்சின் அதிகாரப்பூர்வ மூலங்களை மேற்கோள்காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஈரான் மீது குண்டுத்தாக்குதல்களை நடத்திய வேளையில், பொதுமக்கள் தகவல்களைப் பெற்றுக்கொள்வதைத் தடுக்கும் நோக்கில் ஈரானிய அதிகாரிகள் நாடு முழுவதும் முழுமையான இணைய முடக்கத்தை அமுல்படுத்தியிருந்தனர்.


இந்த முடக்கம் 87 நாட்களுக்கு மேலாக நீடித்ததாக நெட்பிளொக்ஸ் (NetBlocks) இணையக் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.


இந்த நீண்டகால இணைய முடக்கம் காரணமாக ஈரானிய பொதுமக்கள் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.


அத்துடன், இணையத்தளங்களை பெரிதும் நம்பியிருந்த உள்நாட்டு வணிக நடவடிக்கைகளுக்கும் இதனால் கடுமையான பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment