கல்கிஸை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் உட்பட 10 சந்தேக நபர்களை கல்கிசை பிராந்திய குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இன்று (9) அதிகாலை கல்கிசை, தெஹிவளை மற்றும் அங்குலான ஆகிய பகுதிகளை உள்ளடக்கி இந்த விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, தற்போது வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரின் எட்டு ஆதரவாளர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து ஒரு கையெறி குண்டு, 35 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 5 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 56 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், அவர்கள் அங்குலான, மொறட்டுவை மற்றும் ரத்மலானை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தெஹிவளை பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் இந்த சந்தேக நபர்களுக்குத் தொடர்பிருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பிராந்திய குற்ற விசாரணை பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment