அம்பாறை - இறக்காமம் பகுதியில், 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இரண்டு இளைஞர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் மதபோதகர் என காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
குறித்த மதபோதகர் சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியிருந்த நிலையில், தமது சட்டத்தரணியுடன் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய போதே, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவருக்கு உதவி செய்த குற்றச்சாட்டில் மற்றுமொரு இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
குறித்த இரண்டு சந்தேகநபர்களும் 21 வயதான இறக்காமம் பகுதியை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இறக்காமம் காவல்துறையினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment