கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் இலங்கையில் 360 இற்கும் அதிகமான இணையவழி நிதி மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைப்பிரிவு வெளிப்படுத்தியுள்ளது.
இது குறித்துப் பேசிய இலங்கை கணினி அவசர தயார்நிலைப்பிரிவின் முதன்மை தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல, மோசடிக்காரர்கள் தற்பொழுது பொதுமக்களை ஏமாற்றுவதற்காகப் புதிய தந்திரோபாயங்களைக் கையாண்டு வருவதாக எச்சரித்துள்ளார்.
உலகளவில் மற்றும் உள்நாட்டில் நன்கு அறியப்பட்ட பிரபல வர்த்தக நாமங்களின் பெயர்கள் மற்றும் இலச்சினைகளைப் பயன்படுத்தி, மோசடிக்காரர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் போலி விளம்பரங்களை உருவாக்கிப் பரப்புகின்றனர்.
இந்த போலியான விளம்பரங்கள் மூலம் பயனர்களின் மிக ரகசியமான தனிப்பட்ட விபரங்கள் மற்றும் நிதிசார் தகவல்கள் திருடப்படுகின்றன.
இவ்வாறு பதிவான முறைப்பாடுகளில் பெரும்பாலானவை, இணையவழிப் போலியான விளம்பரங்கள் ஊடாகப் பொதுமக்களின் கிரெடிட் கார்ட் விபரங்களை அநாகரிகமான முறையில் திருடிய சம்பவங்களுடன் தொடர்புடையவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment