காலி, எல்பிட்டிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2 மாத பச்சிளம் குழந்தையை கிணற்றுக்குள் வீசிய தாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்பிட்டிய, கஹதூவ, துடுவெகொட பகுதியில், இரண்டு மாதங்களே நிரம்பிய தனது சொந்தப் பெண் குழந்தையை தாயாரே கிணற்றில் வீசியுள்ளார்.
குழந்தையை கிணற்றில் வீசிய பின்னர் குறித்த பெண் சத்தமிட்டுள்ளார். இந்த அலறல் சத்தத்தைக் கேட்டு விரைந்து செயற்பட்ட குழந்தையின் தந்தை, உடனடியாக குழந்தையை மீட்டு எல்பிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக காவல்துறையினர் சூரியன் செய்தி சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரசவத்தின் பின்னரான மனச்சோர்வு மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட விரக்தியினாலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக குழந்தையை கிணற்றில் வீசிய பெண்ணை எல்பிட்டிய காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்
0 comments:
Post a Comment