Monday, June 1, 2026

சென்னையில் இலங்கை யுவதி உயிரிழப்பு - 6 பேர் கைது

 

தமிழ்நாடு, சென்னையில் இலங்கை யுவதி ஒருவரை வாகனத்தால் மோதி, மரணம் அடைய செய்தமை தொடர்பில், ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னை - கோயம்பேட்டில் சிற்றூந்து ஒன்று, குறித்த யுவதி பயணித்த உந்துருளியை மோதிய போது, இந்த மரணம் சம்பவித்ததாகத் தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு முகாமில் வசித்த 18 வயதான யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த யுவதி இன்ஸ்டகிராம் ஊடாக பழகிய சென்னையிலுள்ள தனது நண்பியை சந்திக்கச் சென்ற நிலையிலேயே இந்த சம்பவத்தை எதிர் நோக்கியுள்ளார்.

சென்னையிலுள்ள இரவு நேரக் களியாட்ட விடுதிக்கு சென்ற குறித்த யுவதியுடன், அங்கிருந்த இரண்டு குழுக்கள் முரண்பட்டுள்ளனர்.

அதன்பின்னர், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட குறித்த குழுவினர், யுவதியை பின்தொடர்ந்து, அவர் பயணித்த வாகனத்தை மோதியுள்ளனர்.

இதன்போது அந்த யுவதி உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

0 comments:

Post a Comment