இலங்கையின் உத்தியோகபூர்வ இருப்புச் சொத்துக்கள் கடந்த மே மாதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, 2026 மே மாத இறுதியில் நாட்டின் உத்தியோகபூர்வ இருப்புச் சொத்துக்கள் 1.6% அதிகரித்து, 6.873 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளன.
கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இந்த இருப்பு 6.766 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்த நிலையில், ஒரே மாதத்தில் 107 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை இப்புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இந்த உத்தியோகபூர்வ இருப்புச் சொத்துக்கள் புள்ளிவிவரத்தில், சீன மக்கள் வங்கியுடனான (People's Bank of China) நாணயப் பரிமாற்றல் ஒப்பந்தத்தின் மூலமான நிதி உள்ளடக்கப்பட்டுள்ளது என்றும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி இலங்கை பயணித்து வரும் நிலையில், இந்த இருப்புச் சொத்துக்களின் உயர்வு நிதித்துறையில் சாதகமான ஒரு நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment