நுழைவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்யும் வழிமுறையின் போது பணம் செலுத்தும் கட்டமைப்பு முறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த டிக்கெட்டுகள் இலவசமாக அந்த ரசிகர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக FIFA நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், அந்த நுழைவுச்சீட்டுகள் தற்போது அவர்களுக்காக தற்காலிகமாக ஒதுக்கீடு செய்து வைக்கப்பட்டுள்ளதுடன், 7 நாட்களுக்குள் அதற்குரிய முழுமையான தொகையைச் செலுத்தி அவற்றைப் பெற்றுக்கொள்ளுமாறு FIFA நிறுவனம் சம்பந்தப்பட்ட ரசிகர்களுக்கு அறிவித்துள்ளது.
அந்த காலப்பகுதிக்குள் பணம் செலுத்தத் தவறினால், குறித்த ஒதுக்கீடுகள் முழுமையாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டு உபசரிப்பில் ஜூன் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணத் தொடரின் நுழைவுச்சீட்டுகளின் விலைகள் மிக உயர் மட்டத்தில் காணப்படுவதாகவும், அதன் விலை மனுக் கோரல் நடைமுறைகளில் சிக்கல்கள் இருப்பதாகவும் சர்வதேச ரீதியில் ஏற்கனவே கடுமையான விவாதங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ள பின்னணியிலேயே இந்த புதிய தொழில்நுட்பக் கோளாறு அறிக்கை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏற்பட்டுள்ள இந்தத் தவறு மற்றும் இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்து FIFA நிறுவனம் தனது வருத்தத்தையும் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment