Monday, June 1, 2026

நுவரெலியாவில் உணவு ஒவ்வாமையினால் 8 பேர் மருத்துவமனையில் அனுமதி


 நுவரெலியாவில் தேவாலயம் ஒன்றில் நேற்று (31) பிற்பகல் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டு 8 பேர் திடீர் ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த 8 பேரும் முட்டை அடங்கிய சோறு பொதியினை உட்கொண்டதாகவும் இவர்களுக்கு வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, அவர்கள் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அவர்களுக்கு தற்போது உடல்நிலை சற்று தேறிவருவதாகவும் ஆபத்தான எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment