நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலையை மேலும் நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் 128 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று (9) இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது அவசரகால நிலையை நீடிப்பதற்கு ஆதரவாக 135 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததுடன், அதற்கு எதிராக 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே வாக்களித்துள்ளனர்.
இதன்படி, 128 மேலதிக வாக்குகளினால் இந்த அவசரகால நிலை நீடிப்புக்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment