Saturday, June 13, 2026

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா: விசேட போக்குவரத்து திட்டம் அறிவிப்பு!

 

கொச்சிக்கடையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாயொட்டி, இன்று 13 ஆம் திகதி (சனிக்கிழமை) பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை புனித அந்தோனியார் சிலையை ஏந்திய வரலாற்றுச் சிறப்புமிக்க மகா ஊர்வலம் நடைபெறவுள்ளதால், கொட்டாஞ்சேனை மற்றும் கடற்கரை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வீதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஊர்வலம் நடைபெறும் வீதிகள் (2026.06.13)

மாலை 04.00 மணி ஊர்வலம்: கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்திலிருந்து ஆரம்பமாகும் புனித அந்தோனியார் ஊர்வலம், கொட்டாஹேன வீதி, கல்பொத்த சுற்றுவட்டம், ஜோர்ஜ் ஆர். டி சில்வா மாவத்தை, ஹெட்டியாவத்த சந்தி, சேர் இராமநாதன் மாவத்தை மற்றும் புனித அந்தோனியார் மாவத்தை வழியாக புனித அந்தோனியார் தேவாலயத்தை அடையும். பின்னர் மாலை 5.00 மணிக்கு விசேட திருப்பலி நடைபெறும்.

மாலை 05.30 மணி மகா ஊர்வலம்: திருப்பலிக்குப் பின்னர் திருத்தலத்திலிருந்து ஆரம்பமாகும் மகா ஊர்வலம், புனித அந்தோனியார் மாவத்தை, ஜிந்துப்பிட்டி சுற்றுவட்டம், ஜிந்துப்பிட்டி வீதி, கதிரேசன் வீதி, ஆண்டிவேல் வீதி, பிராஸ் ஃபௌண்டர் வீதி, ஜிந்துப்பிட்டி வீதி, ஹின்னி அப்புஹாமி மாவத்தை, புதிய செட்டித்தெரு மற்றும் ஜம்பட்டா வீதி வழியாக மீண்டும் தேவாலயத்தை சென்றடையும்.

இதனால் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் தேவைக்கேற்ப பின்வரும் வீதிகளில் வாகன நுழைவு கட்டுப்படுத்தப்படலாம்.

ஹெட்டியாவத்த சந்தியிலிருந்து புனித அந்தோனியார் திருத்தலம் நோக்கி.

ஜிந்துப்பிட்டி சுற்றுவட்டத்திலிருந்து புனித அந்தோனியார் திருத்தலம் நோக்கி.

சீனா வீதி சந்தியிலிருந்து ரெக்லமேஷன் வீதி வழியாக ஜிந்துப்பிட்டி நோக்கி.

செட்டித்தெருவிலிருந்து மற்றும் ஆட்டுப்பட்டித் தெரு வீதியிலிருந்து ஆண்டிவேல் வீதிக்கு.

ஆட்டுப்பட்டித் தெரு வீதி மற்றும் மகா வித்தியாலய மாவத்தை கடிகாரக் கோபுர சுற்றுவட்டத்திலிருந்து விவேகானந்த மேடு நோக்கி.

மகா வித்தியாலய மாவத்தையிலிருந்து புதிய செட்டித்தெருவிற்கும் சங்கமித்த மாவத்தைக்கும்.

ஜோர்ஜ் ஆர். டி சில்வா மாவத்தையிலிருந்து கிரீன் லேன், ஜம்பட்டா வீதி, கல்பொத்த வீதி, போதிராஜா மாவத்தை, சிவானந்தா வீதி மற்றும் ஜம்பட்டா மாவத்தை நோக்கி.

சங்கமித்த மாவத்தையிலிருந்து ஜம்பட்டா வீதிக்கு.

ஓட்டுநர்களுக்கான மாற்று வழிகள்

மோதரை பகுதியிலிருந்து புறக்கோட்டை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் ஹெட்டியாவத்தை சந்தியில் இடதுபுறம் திரும்பி, ஜோர்ஜ் ஆர்.டி. சில்வா மாவத்தை வழியாக ஆமர் பாபர் சந்தியை நோக்கிச் செல்லலாம்.

புறக்கோட்டையிலிருந்து மோதரை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் சீனா வீதி, பிரதான வீதி, கேஸ்பஹ சந்தி, ஆட்டுபட்டித் தெரு வீதி (ஸ்ரீ ரத்னஜோதி சரவணமுத்து மாவத்தை), மகா வித்தியாலய மாவத்தை, கடிகாரக் கோபுர சுற்றுவட்டம், மகா வித்தியாலய மாவத்தை மற்றும் ஆமர் பாபர் சந்தி வழியாகச் செல்லலாம்.

அனுமதிக்கப்பட்ட வாகனத் தரிப்பிடங்கள்

திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காகப் பின்வரும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஜிந்துப்பிட்டி தேவாலய வாகனத் தரிப்பிடம்
கோல்ட் மார்க்கெட் வாகனத் தரிப்பிடம்
ரெக்லமேஷன் வீதி வாகனத் தரிப்பிடம்
ஜோர்ஜ் ஆர். டி சில்வா மாவத்தை வாகனத் தரிப்பிடம்
புளூமெண்டல் வீதி வாகனத் தரிப்பிடம்
புதிய மாவத்தை (ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பகேவத்த சந்தி வரையிலான பகுதி)

எனவே, குறிப்பிட்ட நாளில் இப்பகுதிகள் வழியாகப் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள், இந்த விசேட போக்குவரத்து ஒழுங்குகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

0 comments:

Post a Comment