Saturday, June 13, 2026

யாழ்- அச்சுவேலி பகுதியில் தீ விபத்து!

 

யாழ்ப்பாணம் - அச்சுவேலி, தீர்த்தங்குளம் பகுதியில் ஏற்பட்ட பாரிய தீப்பரவல் தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.


அச்சுவேலி காவல்துறையின் அதிகாரி சூரியன் செய்திப்பிரிவுக்கு இதனை உறுதிப்படுத்தினார்.

இந்த தீப்பரவல் நேற்றிரவு ஏற்பட்டதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

எனினும் தீப்பரவலினால் எந்தவிதமான ஆபத்துக்களும் நேரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் தீப்பரவலுக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையின் அதிகாரி சூரியன் செய்திப்பிரிவுக்கு இதனை குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment