கால்பந்து தொடரின் 'ரவுண்ட் ஒஃப் 32' சுற்றில், நெதர்லாந்து அணியை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி மொரோக்கோ அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றிலிருந்து அடுத்த சுற்றுக்கு (Last 16) முன்னேறியுள்ளது.
ஆட்டத்தின் 120 நிமிட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து 1-1 என சமநிலையில் இருந்தன.
நெதர்லாந்து வீரர் கோடி காக்போ (Koti Kakpo) கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மொரோக்கோவின் இஸ்ஸா டியோப் (Issa Diop) கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.
விறுவிறுப்பான பெனால்டி ஷூட்-அவுட்டில், மொரோக்கோ அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மொரோக்கோ அணியின் நட்சத்திர வீரர் இஸ்மாயில் சைபாரி (Ismail Saibari) வெற்றியைக் தீர்மானிக்கும் இறுதி பெனால்டி வாய்ப்பை கோலாக்கி மொரோக்கோவை வெற்றி பெறச் செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் மொரோக்கோ அடுத்த சுற்றில் கனடா அணியை எதிர்கொள்ள உள்ளது.
நெதர்லாந்து அணி இந்தத் தோல்வியுடன், 2026 கால்பந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
0 comments:
Post a Comment