Monday, June 1, 2026

மீகொட சம்பவம் - விபத்தை ஏற்படுத்திய சிற்றூந்தின் சாரதி கைது

 

கொழும்பு - மீகொட பகுதியில் விசாகப் பூரணையை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த தானசாலைக்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது வாடகை சிற்றூந்து மோதியதில்  ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இதன்போது, காயமடைந்த சிறு குழந்தை உட்பட ஏழு பேர் ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.
 
அவிசாவெல்ல பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குறித்த வாடகை சிற்றூந்து ஒன்று, மீகொட சந்திப்பில் உள்ள தானசாலையில் வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இதன்போது, வரிசையிலிருந்த 15, 32 மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35 மற்றும் 38 வயதுடைய மூன்று ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.
 
சம்பவம் தொடர்பில், 42 வயதான  சிற்றூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

அத்துடன், விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment