Monday, June 22, 2026

கதலுவ கடலில் குளித்து கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

 

காலி- ஹபரதுவ காவல்துறை பிரிவின் கதலுவ பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்த ஒருவர் நேற்று (21) பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக ஹபரதுவ காவல்துறை தெரிவித்துள்ளது.

குருநாகல் பகுதியிலிருந்து மற்றொரு குழுவினருடன் சுற்றுலா சென்றிருந்த ஒரு குழுவினர், கதலுவ கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நீரில் அடித்துச் செல்லப்பட்டவரை, அருகிலிருந்த மக்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நீரில் மூழ்கி உயிரிழந்தவர் பொதுஹேர பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் ஆவார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஹபரதுவ காவல்நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

0 comments:

Post a Comment