போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படும் உடன்பாடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.
இதன்கீழ், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் ஈரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை நீக்குவது உள்ளிட்ட திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை, ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் அடுத்த கட்டமாகவே முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment