Tuesday, June 2, 2026

லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம்

 

லிட்ரோ சமையல் எரிவாயுவின் ஜூன் மாதத்துக்கான விலை திருத்தம் குறித்த அறிவிப்பு, நாளை மறுதினம் (04) வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஜூன் 5 ஆம் திகதி எரிவாயு விலையை திருத்தியமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாதாந்த எரிவாயு விலை திருத்தத்திற்குத் தேவையான அறிக்கைகள் தற்போது நிதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் இறுதி அறிக்கை நாளை மறுதினம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

உலக சந்தையில் நிலவும் விலை நிலவரங்களுக்கு அமையவே இம்முறை எரிவாயு விலையைத் திருத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

0 comments:

Post a Comment