அம்பாறை - காரைதீவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஒருவர், சிறைக்கூடத்திற்குள் இருந்து, உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்ப பிரச்சினை காரணமாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரே உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட நிலையில், அவர் சிறைக்கூடத்திற்குள் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
எனினும், அவரின் உடலில் காயங்கள் காணப்படுகின்றமையால், மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றார்.
இந்த நிலையில், உயிரிழந்தவரின் உடலம் தற்போது சம்மாந்துறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், சட்ட மருத்துவ அறிக்கைக்காக உடலத்தை அம்பாறை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு உயிரிழந்தவரின் மரணம் தொடர்பில் தற்போது பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சூரியன் செய்தி பிரிவுக்கு காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
0 comments:
Post a Comment