இது குறித்து தெஹ்ரான் துணை முதல்வர் முகமது அமீன் தவகோலிசாதே தகவல் வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தலைநகர் தெஹ்ரான், கொம் மற்றும் மஷாத் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் நடைபெறும்.
தலைநகர் தெஹ்ரானில் 24 மணி நேர சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 2கோடி மக்கள் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், கமேனியின் இறுதி விருப்பத்தின்படியும் அவரது உறவினர்களின் ஆலோசனையின்படியும், மஷாத் நகரில் உள்ள புகழ்பெற்ற இமாம் ரெசா புனிதத் தலத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
ஈரானை கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் வழிநடத்திய 86 வயதான ஆயதுல்லா அலி கமேனி, கடந்த பெப்ரவரி 28 அன்று மத்திய தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாக, மார்ச் 4ஆம் திகதியன்று நடத்தவிருந்த இறுதிச்சடங்கு ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது போர்ச் சூழல் தணிந்துள்ள நிலையில், இந்த இறுதிச்சடங்கு நிகழ்வுகள் ஜூன் மாத நடுப்பகுதியில் இஸ்லாமிய நாட்காட்டியின் முஹர்ரம் மாத தொடக்கத்தில் நடத்தப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment