இலங்கை காவல்துறையினரின் விசேட புலனாய்வுத் தகவல்களின்படி, பயாகல - மெஹிமுல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சம்பத் குமாரதுங்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் குழுக்களுக்கிடையில் 'போஞ்சியா' என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுபவர் ஆவார்.
இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றது முதல் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இதன் ஒரு கட்டமாக, மாளிகாவத்தை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராத் தரவுகளை காவல்துறையினர் விரிவாகப் பகுப்பாய்வு செய்தனர்.
இதன் போது கிடைத்த துல்லியமான இரகசியத் தகவலின் அடிப்படையில், மாளிகாவத்தை பகுதியிலுள்ள வீடு ஒன்றில் பதுங்கியிருந்த வேளையிலேயே களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் இந்தச் சந்தேக நபரை அதிரடியாக வளைத்துப் பிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள 'போஞ்சியா' எனப்படும் சம்பத் குமாரதுங்க, இதற்கு முன்னரும் பல தடவைகள் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருட்களைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த ஒருவராவார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, சந்தேக நபரை இன்றைய தினம் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, இக்கொலையின் பின்னணியிலுள்ள ஏனைய நபர்களைக் கண்டறிவதற்காக அவரைத் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவை நீதிமன்றத்திடமிருந்து பெற்றுக்கொள்ள காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment