Tuesday, June 9, 2026

இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் புதிய அம்சம் : மெட்டா அறிமுகப்படுத்தும் 'Series' வசதி

 

சமூக வலைத்தள ஜாம்பவானான மெட்டா (Meta) நிறுவனம், தனது முன்னணி செயலிகளான இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பயனர்களுக்காக 'Series' என்ற புதியதொரு அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

Reels-இன் ஒரு பகுதியாகக் கொண்டுவரப்படும் இந்த புதிய வசதியானது, ஆக்கப்பூர்வமான உள்ளடக்கங்களை உருவாக்கும் கிரியேட்டர்கள் (Creators) மற்றும் பொதுவான பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள நடைமுறையின்படி, ஒரு நீண்ட காணொளியை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக இருந்தால், அதனை Part 1, Part 2 என தனித்தனியாக எடிட் செய்து பதிவிட வேண்டிய தேவை காணப்படுகிறது.

இருப்பினும், மெட்டா அறிமுகப்படுத்தவுள்ள இந்த புதிய 'Series' அம்சத்தின் மூலம், நீண்டதொரு காணொளியை தனித்தனியாகப் பதிவிடாமல், ஒரே கிளிக்கில் அனைத்து எபிசோடுகளையும் (Episodes) ஒன்றிணைக்கும் வகையில் இந்த அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ரீல்ஸ் தளங்களில் பயனர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஸ்மார்ட் தொழில்நுட்ப அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் தொடர் காணொளிகளை மிகவும் இலகுவாகவும், எபிசோட் வாரியாகவும் வரிசைப்படுத்தி ஒரே இடத்தில் பார்வையாளர்களுக்கு வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment