அபாயகரமான மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக இலங்கை காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, கடுமையான போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர், தற்போதுள்ள போக்குவரத்துச் சட்டங்களின் கீழ் விதிக்கப்படும் அபராதங்களுடன் கூடுதலாக குற்றவியல் வழக்குகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
இந்தநிலையில், கடுமையான போக்குவரத்து விதிமீறல்கள் இனி சம்பவ இடத்திலேயே அபராதம் விதிப்பதன் மூலம் மட்டும் கையாளப்படாது.
மாறாக, விதிமீறல்களில் ஈடுபடுவோர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்று போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் சாலைப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
ஜூன் 27 அன்று 321 அபாயகரமான மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் சம்பவங்களையும் ஜூன் 28 அன்று மேலும் 315 சம்பவங்களையும் காவல்துறை கண்டறிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வாகனத் தொகுப்பில் உந்துருளிகள் 51வீதமாகவும் முச்சக்கர வாகனங்கள் 12வீதமாகவும் பயன்பாட்டில் உள்ளதாக பிரதிப் காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment