Wednesday, July 1, 2026

விசேட தேவையுடையோருக்கு விசேட அடையாள அட்டைகள்!

 

அரச நிறுவனங்களில் விசேட தேவையுடையோருக்கு முன்னுரிமை சேவைகளை வழங்குவதற்காக, விசேட அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

விசேட தேவையுடையோருக்கான தேசிய சபை இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளது.
 
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் உபாலி பன்னில தலைமையில், இடம்பெற்ற நிகழ்வில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விசேட தேவையுடையோரை விளிக்கும்போது, பயன்படுத்தப்பட வேண்டிய சொற்களஞ்சியத்தை உத்தியோகபூர்வ மொழிகள் திணைக்களத்துடன் இணைந்து வெளியிடவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment