Saturday, July 25, 2026

பெல்லன்வில துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

 

பெல்லன்வில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உணவக உரிமையாளர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று இரவு இடம்பெற்றது.

தமக்கு சொந்தமான உணவகத்திற்கு முன்பாக குறித்த நபர் நின்று கொண்டிருந்த வேளையிலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர்கள் குறித்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை என காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment