Saturday, July 25, 2026

ஜனாதிபதி மாளிகையில் வெளிநபர்கள் தங்கியுள்ளனரா? ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட விளக்கம்!

 

ஜனாதிபதி மாளிகையில் வெளிநபர்கள் தங்கியிருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டில் ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள ஏனைய கட்டிடங்களில், கடமை நிமித்தம் பாதுகாப்புப் படையினர், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய துறை சார்ந்த அதிகாரிகள் மட்டுமே பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கியிருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த அதிகாரிகளில் எவரும் பிரதான ஜனாதிபதி மாளிகைக்குள் தங்கவைக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

0 comments:

Post a Comment