சமீபத்தில் அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில், அடுத்த 10 வருடங்களுக்குள் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மீது மனிதர்கள் கொண்டிருக்கும் கட்டுப்பாடு பெருமளவில் குறையக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2036ஆம் ஆண்டளவில் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் உலகின் பல துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகலாம் என்றும், அது மனிதகுலத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறுவதற்கான சாத்தியம் 10 - 20 சதவீதம் வரை இருக்கலாம் என்றும் அவர் மதிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், மனிதர்களின் மொத்த அறிவுத் திறனை விட செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மேம்பட்ட திறனைப் பெறக்கூடும் என்றும், பல்வேறு பணிகளை மனிதர்களைவிட திறமையாக மேற்கொள்ளும் நிலை உருவாகும் என்றும் ஈலோன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் உற்பத்தித்திறன் கணிசமாக உயரக்கூடும் என்பதால், அதன் சாதகமான அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இருப்பினும், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பங்களின் அதிவேக வளர்ச்சியை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான தெளிவான வழிமுறைகள் தற்போது இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment