கொட்டகலை இலங்கை வங்கிக்கு அருகில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த உறுப்பினர் சிற்றூந்தில் ஏறுவதற்காகச் சென்றபோது, உந்துருளியில் வந்த இருவர் அவரை கட்டாயப்படுத்தி சிற்றூந்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுக்க முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் தானே கீழே இறங்கிய போது அவரை உள்ளே இழுக்க முயன்றதுடன், கடுமையான வலியை ஏற்படுத்தியதுடன், உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
அத்துடன், சிற்றூந்தின் சாவியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சர்க்கரை நோயாளியான தனக்கு இந்தச் சம்பவத்தால் கடும் உடல் உபாதைகளும் மனவேதனையும் ஏற்பட்டுள்ளதுடன், கையில் லேசான முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து கொட்டகலை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
0 comments:
Post a Comment