புத்தளம் - ஆனமடுவ நகருக்கு அருகிலுள்ள பரமகந்த சந்தி பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், உந்துருளியும் மோதி இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஆனமடுவ, உரியாவ பகுதியைச் சேர்ந்த 38 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான துமிந்த சந்தருவன் விக்ரமாராச்சி என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த அதிகாரி, திருகோணமலையில் நடைபெற்ற நீண்டகால இராணுவப் பயிற்சிக்குப் பின்னர், கடந்த 19 ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார்.
விடுமுறை நிறைவடைநது அவர் இன்று(20) மீண்டும் பணிக்குத் திரும்பவிருந்த நிலையிலேயே, விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
புத்தளத்திலிருந்து குருநாகல் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வேகக்கட்டுபாட்டை இழந்து, உந்துருளியுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment