Thursday, July 9, 2026

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணி ஆரம்பம்

 வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் மற்றும் விநியோகிக்கும் பணிகளில் புதிய வாகனப் பதிவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.


சுமார் ஓராண்டு கால இடைநிறுத்தத்திற்குப் பின்னர், வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் கடந்த ஜூன்மாதம் 8ஆம் திகதி வேரஹெரவிலுள்ள அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதால் சுமார் ஒரு மில்லியன் இலக்கத் தகடுகளின் விநியோகம் நிலுவையில் உள்ளது.

இந்த நிலுவையை நிவர்த்தி செய்வதற்கும், எதிர்காலத்தில் இலக்கத் தகடுகளைத் தடையின்றி விநியோகிப்பதற்கு தனியார் நிறுவனத்துடன் 3 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஐந்தாண்டு ஒப்பந்தத்தை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.

அதற்கமைய வேரஹெர அலுவலகம் தற்போது இரு கட்டங்களாகத் தனது பணிகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் பகல் நேரத்தில் அச்சிடப்படும்.

நிலுவையில் உள்ள இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் இரவு நேரத்தில் மேலதிக பணியாளர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்படும்.

0 comments:

Post a Comment