இலங்கையில் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது பாலினத்தை மாற்றிக்கொள்வதற்கு அனுமதி அளித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்ரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட பலரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இலங்கை வான்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியான சாந்த ஜயதிலக என்பவரால் இந்த மனு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
0 comments:
Post a Comment